சென்னையில் உள்ள புழல் மத்திய சிறை-II-இல் பயணம் (PAYANAM) என்ற சோதனை போதைப் பொருளற்ற மறுவாழ்வு மற்றும் மீட்சித் திட்டம் தொடங்கப்பட்டது.
PAYANAM என்பது Positive Awareness Yielding Against Narcotics Addiction Movement என்பதன் சுருக்கமாகும்.
ஆலோசனை, உளவியல் ஆதரவு, சிகிச்சைத் தலையீடுகள் மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சி ஆகியவற்றின் மூலம் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது சிறைவாசிகளின் நடத்தை மாற்றம், மறுவாழ்வு மற்றும் சமூக மறு ஒருங்கிணைப்பு ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.
பயணம் திட்டமானது சிறைக்காவலைத் தாண்டி சிகிச்சை, சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை நோக்கிய சீர்திருத்த சேவைகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு சோதனைத் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.