TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 27 , 2026 4 days 63 0
  • 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ராஜஸ்தானின் பொக்ரானில் இந்தியாவின் முதல் உள்நாட்டு நீண்ட தூர ஒரு வழித் தாக்குதல் (OWA) ஆளில்லா விமானமான KAL வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
    • OWA ஆளில்லா விமானம் என்பது ஒரு வழி ஆளில்லா விமானமாகும், இது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைந்து, ஏவப்பட்ட இடத்திற்குத் திரும்பாமல் அதைத் தாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • சீனாவின் ஷாங்காயில் நடைபெறும் 48வது உலகத் திறன் போட்டியில் பங்கேற்பதற்காக இதுவரை இல்லாத அளவில் 70 திறமையான போட்டியாளர்கள் அடங்கிய மிகப்பெரிய குழுவை இந்தியா அனுப்பியுள்ளது.
    • இந்தியாவின் உலகளாவிய திறன் தரவரிசையானது 2015 ஆம் ஆண்டில் 29வது இடத்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது, மேலும் 2025 ஆம் ஆண்டு உலகத் திறன் ஆசியா போட்டியில் இந்தியா 8வது இடத்தையும் பிடித்தது.
  • ஜப்பானின் நகோயாவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது.
    • கலப்பு அணிகளுக்கான ஸ்கீட் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா மற்றும் பரிநாஸ் தலிவால் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
  • நீர் பாதுகாப்பு, பருவநிலையைத் தாங்கும் நீர் மேலாண்மை, கொள்கை உரையாடல், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு 9வது இந்திய சர்வதேச நீர் வாரம் (IIWW) 2026 புது தில்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
    • 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 முதல் 26 வரை ஜல் சக்தி அமைச்சகத்தால் “Climate Resilient Water Management” என்ற கருத்துருவுடன் IIWW 2026 ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது.
  • புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை, கவனிப்பு மற்றும் ஊக்கத்தை அளித்து ஆதரவு அளிப்பதற்காக 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று உலக ரோஜா தினம் அனுசரிக்கப் படுகிறது.
    • உலக ரோஜா தினமானது இந்த தினத்தை அனுசரிக்கத் தூண்டுகோலாக அமைந்த இளம் கனேடிய புற்றுநோயாளியான மெலிண்டா ரோஸினுடன் தொடர்புடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்