24 பதிவுசெய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்
June 30 , 2025 4 days 76 0
தமிழ்நாட்டில் குறைந்தது 24 அரசியல் கட்சிகள் 'பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப் படாத அரசியல் கட்சிகள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றிற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் காரணம் கேட்பு அறிக்கை அனுப்பப் படுவதற்கான வாய்ப்புள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் இவை ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை.
அரசியல் கட்சிகள் அனைத்தும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 29Aவது பிரிவின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன.
இவ்வாறு பதிவு செய்வதன் மூலம், அவற்றிற்கு வருமான வரிச் சட்டத்தின் 13Aவது பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு, சின்னங்கள் குறித்த உத்தரவின் 6வது பத்தியின் கீழ் அங்கீகாரம், பொதுவான சின்னம் ஒதுக்கீடு மற்றும் நட்சத்திரப் பிரச்சாரகர்களை பரிந்துரைத்தல் போன்ற பல சலுகைகள் கிடைக்கின்றன.
இந்தச் சட்டத்தின் 29Aவது பிரிவின் கீழ் ஒரு சங்கத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் நோக்கம், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அந்தப் பகுதியின் பயன்களைப் பெறுவதாகும்.
அதாவது ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களில் பங்கேற்பதைக் குறிக்கிறது.