30 கோடி கோவிட்-19 தடுப்பு மருந்துகள் – பயோலாஜிகல் இ
June 7 , 2021 1523 days 605 0
ஹைதராபாத்திலுள்ள தொற்று தடுப்பு மருந்து உற்பத்தியாளரான பயோலாஜிகல் இ எனும் நிறுவனத்திடமிருந்து 30 கோடி கோவிட்-19 தடுப்பு மருந்துகளைப் பெறுவதற்கான (கோர்ப்வாக்ஸ்) ஏற்பாடுகளை சுகாதார அமைச்சகம் நிறைவு செய்துள்ளது.
இதற்காக மத்திய அரசானது பயோலாஜிகல் இ நிறுவனத்திற்கு 1,500 கோடி ரூபாயை முன்பணமாக செலுத்த உள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சினை அடுத்து இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப் படும் இரண்டாவது தடுப்பு மருந்து இதுவாகும்.