மத்திய வேளாண் அமைச்சரான நரேந்திர சிங் தோமர் அவர்கள் அதிக மகசூல் தரக் கூடிய எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளின் விதைகள் அடங்கிய சிறு தொகுப்பினை விவசாயிகளுக்கு வழங்கிடுவதற்கான திட்டமான மினிகிட் என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
74000 நிலக்கடலை விதைகளின் சிறுதொகுப்பு மற்றும் 8 லட்சம் அளவிலான சோயா அவரை விதைகளின் சிறுதொகுப்பு மற்றும் 20,27,318 பருப்பு வகை விதைகளின் சிறு தொகுப்பு போன்றவை தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நேரடியாக விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
இந்தச் சிறு தொகுப்புகளானது (மினிகிட்) தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தையிடல் கூட்டமைப்பு, தேசிய விதைகள் கூட்டுறவு கழகம் மற்றும் குஜராத் மாநில விதைகள் கழகம் ஆகியவற்றால் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்திற்கு தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அரசு முழு நிதி உதவியினை வழங்குகிறது.