‘மாறும் மூலதன நிறுவனங்கள்’ மீதான டாக்டர் K.P. கிருஷ்ணன் குழுவானது சர்வதேச நிதி சேவை மைய ஆணையத்திடம் (International Financial Services Centres Authority – IFSCA) தனது அறிக்கையினைச் சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையானது இந்தியாவிலுள்ள சர்வதேச நிதி சேவை மையங்களில் “மாறும் மூலதன நிறுவனங்களின்” செயலாக்கம் குறித்ததாகும்.
மாறும் மூலதன நிறுவனங்கள் என்பது ஒரு பரந்த அளவிலான அல்லது குறுகிய அளவிலான மாற்று மற்றும் பாரம்பரிய நிதி உத்திகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு மாற்று வகையிலான பெருநிறுவன சாதனமாகும்.
இது நெகிழ்திறனுடைய மூலதனத்தைக் கொண்ட ஒரு பெருநிறுவன சாதனமாகும்.
ஏனெனில் இதன் மூலம் முதலீடுகள் செய்யப் படும் போது உருவாக்கப்படும் பங்குகள் பங்குதாரர்களால் உடனடியாக மீட்டெடுக்கக் கூடிய வகையில் ஆனதாகும்.
இது நிதி மேலாண்மை தொழில்துறைக்காக வடிவமைக்கப்பட்டதாகும்.