TNPSC Thervupettagam

33வது பிரகதி உரையாடல்

December 2 , 2020 1698 days 680 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த பிரகதி சந்திப்பிற்குத் தலைமை தாங்கினார்.
  • பிரகதி என்பது துடிப்பான செயல்பாடு கொண்ட ஆளுகை மற்றும் குறித்த காலத்திற்குள் திட்டங்களைச் செயல்படுத்துதல் என்பதைக் குறிக்கும்.
  • இது 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது பிரதமர் அலுவலகம், இந்திய அரசின் செயலாளர்கள் மற்றும் மாநிலத் தலைமைச் செயலாளர்கள் என மூன்று அடுக்கு முறையில் செயல்படுகின்றது.
  • இது பொது மக்களின் குறைகளைக் களைவதை நோக்கமாகக் கொண்ட பல்முனை மற்றும் பல பயன்பாட்டுத் தளமாகும்.
  • மேலும் இது இந்திய அரசு மற்றும் மாநில அரசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்களைக் கண்காணித்து மறு ஆய்வு செய்கின்றது.
  • இந்த நிகழ்வானது மாதத்திற்கு ஒருமுறை அதாவது நான்காவது புதன் கிழமையன்று நடைபெறுகின்றது.
  • இந்தத் தினமானது பிரகதி தினம் என்று அழைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்