TNPSC Thervupettagam

412 வீரதீர விருதுகள்

January 30 , 2023 927 days 486 0
  • ஆயுதப்படை வீரர்கள் மற்றும் பிற நபர்களுக்கான 412 வீரதீர விருதுகள் மற்றும் பிற பாதுகாப்பு துறை விருதுகளை வழங்குவதற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் ஒப்புதல் வழங்கினார்.
  • மேஜர் ஷுபாங் மற்றும் நாயக் ஜிதேந்திர சிங் ஆகியோர் கீர்த்தி சக்ரா விருதைப் பெற உள்ளனர்.
  • MiG-29K ரக போர் விமான விபத்தில் உயிரிழந்த கடற்படையைச் சேர்ந்த படைத்தளபதி நிஷாந்த் சிங், நவ் சேனா பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட உள்ளார்.
  • இந்த விருதுகளில் பின்வருவன அடங்கும்
    • ஆறு கீர்த்தி சக்கரா விருதுகள் (நான்குபேருக்கு -  மரணத்திற்குப் பின்),
    • 15 சௌரிய சக்கரா விருதுகள் (இரண்டு பேருக்கு - மரணத்திற்குப் பின்),
    • 93 சேனா பதக்கங்கள் (வீரதீரச் செயல்) (நான்கு பேருக்கு - மரணத்திற்குப் பின்),
    • ஒரு நவ் சேனா பதக்கம் (வீரதீரச் செயல்) மரணத்திற்குப் பின்,
    • ஏழு வாயு சேனா பதக்கங்கள் (வீரதீரச் செயல்),
    • 29 பரம் விசிஷ்ட் சேவா பதக்கங்கள் (PVSM),
    • மூன்று உத்தம் யுத் சேவா பதக்கங்கள் (UYSM),
    • 53 அதி விஷிஷ்ட் சேவா பதக்கங்கள் (AVSM),
    • 10 யுத் சேவா பதக்கங்கள் (YSM),
    • 40 சேனா பதக்கங்கள் (கடமைப் பற்று),
    • 13 நவ் சேனா பதக்கங்கள் (கடமைப் பற்று) (அவற்றில் ஐந்து மரணத்திற்குப் பின்),
    • 14 வாயு சேனா பதக்கங்கள் (கடமைப் பற்று) மற்றும்
    • 128 விஷிஷ்ட் சேவா பதக்கங்கள் (VSM).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்