TNPSC Thervupettagam

5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் வழங்கீடு

November 29 , 2021 1366 days 543 0
  • இந்தியா முதன்முறையாக தனது மூலோபய பெட்ரோலிய இருப்புகளிலிருந்து, சுமார் 5 மில்லியன் பீப்பாய் என்ற அளவில் கச்சா எண்ணெயை வெளியிட திட்டமிட்டுள்ளது.
  • இது உலகளவில் கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதற்கு என்று அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரிய ஆகிய நாடுகளுடன் இணைந்து ஆலோசித்து மேற்கொள்ளப்படுகிறது.
  • கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளிலுள்ள 3 இடங்களில் நிலத்தடிக் குழிகளில் சுமார் 38 மில்லியன் பீப்பாய்களில் கச்சா எண்ணெயை இந்தியா சேமித்து வைத்துள்ளது.
  • 5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயானது விசாகப்பட்டினத்திலுள்ள இந்துஸ்தான் பெட்ரோலியக் கழக நிறுவனம் மற்றும் மங்களூருவிலுள்ள மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் நிறுவனம் ஆகிய அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்