'பிரதான் மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா' திட்டத்தின் கீழ் பயன்பெறும் இந்தியக் குடும்பங்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார்.
வீட்டுக் கூரைகளில் சூரியமின் தகடுகளை அமைப்பதை ஊக்குவிப்பதன் மூலம் குடும்பங்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வீட்டுக் கூரைகளில் சூரியமின் தகடுகளை அமைக்கும் குடும்பங்களுக்கு, மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் ₹78,000 வரை நேரடி நிதியுதவி ஆகியவற்றை வழங்குவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் 2027 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று நிறைவடைகிறது.
இது உலகின் மிகப்பெரிய வீட்டுக்கூரை சூரியமின் உற்பத்தித் திட்டமாகும்.
இது 2024-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஒரு மத்தியத் துறைத் திட்டமாகும்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா 300 ஜிகாவாட்டிற்கும் (GW) அதிகமான புதைபடிவ எரிபொருள் சாராத மின் உற்பத்தித் திறனைச் சேர்த்துள்ளது.
2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் என்ற இலக்கை அடைவதற்கான பாதையில் இந்தியா உறுதியாகச் சென்று கொண்டிருக்கிறது.
ஜூன் 30 நிலவரப்படி, இந்தியாவின் நிறுவப்பட்ட சூரியமின் உற்பத்தித் திறன் 162.15 ஜிகாவாட்டாக இருந்தது.
இதில் 125.6 ஜிகாவாட் அளவிலான பெரிய அளவிலான திட்டங்கள் (utility-scale projects), 30.11 ஜிகாவாட் அளவிலான வீட்டுக்கூரைத் திட்டங்கள் மற்றும் 6.43 ஜிகாவாட் அளவிலான மின்-கட்டமைப்பு சாராத திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளராகத் திகழ்கிறது.