50 பில்லியன் டாலர் மதிப்பிலான உலகளாவிய தடுப்பூசி வழங்கும் திட்டம்
May 25 , 2021 1636 days 642 0
சர்வதேச நாணய நிதியமானது 50 பில்லியன் டாலர் மதிப்பிலான உலகளாவிய தடுப்பூசி வழங்கும் திட்டம் ஒன்றினை முன்மொழிந்துள்ளது.
இதன் மூலம் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள்தொகையில் 40 சதவீதத்தினருக்குத் தடுப்பூசி வழங்கப்படும்.
மேலும் 2022 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் உலக மக்கள் தொகையில் குறைந்த பட்சம் 60 சதவீதத்தினருக்குத் தடுப்பூசி வழங்கப்படும்.
இந்தத் திட்டமானது உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி, கவி அமைப்பு (உலக தடுப்பு மருந்துக் கூட்டணி) மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியவற்றினுடைய பணிகளின் வரிசையில் முன்மொழியப் பட்டுள்ளது.