TNPSC Thervupettagam

50 லட்சம் வீட்டுக்கூரை சூரியசக்தி அமைப்புகள்

August 12 , 2026 21 hrs 0 min 53 0
  • 'பிரதான் மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா' திட்டத்தின் கீழ் பயன்பெறும் இந்தியக் குடும்பங்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார்.
  • வீட்டுக் கூரைகளில் சூரியமின் தகடுகளை அமைப்பதை ஊக்குவிப்பதன் மூலம் குடும்பங்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வீட்டுக் கூரைகளில் சூரியமின் தகடுகளை அமைக்கும் குடும்பங்களுக்கு, மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் ₹78,000 வரை நேரடி நிதியுதவி ஆகியவற்றை வழங்குவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் 2027 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று நிறைவடைகிறது.
  • இது உலகின் மிகப்பெரிய வீட்டுக்கூரை சூரியமின் உற்பத்தித் திட்டமாகும்.
  • இது 2024-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஒரு மத்தியத் துறைத் திட்டமாகும்.
  • கடந்த பத்தாண்டுகளில் இந்தியா 300 ஜிகாவாட்டிற்கும் (GW) அதிகமான புதைபடிவ எரிபொருள் சாராத மின் உற்பத்தித் திறனைச் சேர்த்துள்ளது.
  • 2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் என்ற இலக்கை அடைவதற்கான பாதையில் இந்தியா உறுதியாகச் சென்று கொண்டிருக்கிறது.
  • ஜூன் 30 நிலவரப்படி, இந்தியாவின் நிறுவப்பட்ட சூரியமின் உற்பத்தித் திறன் 162.15 ஜிகாவாட்டாக இருந்தது.
  • இதில் 125.6 ஜிகாவாட் அளவிலான பெரிய அளவிலான திட்டங்கள் (utility-scale projects), 30.11 ஜிகாவாட் அளவிலான வீட்டுக்கூரைத் திட்டங்கள் மற்றும் 6.43 ஜிகாவாட் அளவிலான மின்-கட்டமைப்பு சாராத திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
  • இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளராகத் திகழ்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்