50வது ஸ்கல் சர்வதேச ஆசியப் பகுதி (SIAA) மாநாடு – 2021
October 16 , 2020 1852 days 778 0
ஜம்மு காஷ்மீரானது 2021 ஆம் ஆண்டின் 50வது வருடாந்திர SIAA (Skal International Asia Area) காங்கிரசை நடத்துவதற்கான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
ஸ்கல் சர்வதேசம் என்பது உலகச் சுற்றுலா மற்றும் தோழமையை ஊக்குவிக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலைவர்களைக் கொண்ட ஒரு தொழில்சார் அமைப்பாகும்.
இது உலகம் முழுவதும் 15,000 உறுப்பினர்கள் மற்றும் 150 பகுதிகளுடன் செயல்படுகின்ற ஸ்பெயினில் உள்ள ஒரு சுற்றுலா அமைப்பாகும்.
பயணம் மற்றும் சுற்றுலாத் தொழிற்துறையின் அனைத்துக் கிளைகளையும் ஒன்றிணைக்கும் ஒரே சர்வதேசக் குழு இதுவாகும்.