2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5G இணையக்கட்டமைப்பு அறிமுகப் படுத்தப்படும் எனத் தொலைத்தொடர்பு துறை உறுதி அளித்தது.
ஆரம்பத்தில் நாட்டிலுள்ள 13 நகரங்கள் 5G சேவையைப் பெறும் என அந்தத் துறை குறிப்பிட்டது.
அவையாவன: அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகியனவாகும்.
கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கூறிய நகரங்கள் சிலவற்றில் ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ போன்ற தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் 5G சேவையின் ஒரு சோதனை ஓட்டத்தை மேற்கொண்டன.
தரவுப் பதிவிறக்க வீதங்களின் அடிப்படையில் 5G தொழில்நுட்பம் மேம்பட்ட பயனர் அனுபவத்தினை வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.