January 7 , 2022
1275 days
684
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது ‘OMISURE’ என்ற ஒரு கருவிக்குச் சமீபத்தில் தனது ஒப்புதலை வழங்கியது.
- OMISURE என்பது ஒரு RT-PCR கருவி ஆகும்.
- இது ஓமைக்ரான் எனும் கோவிட்-19 வைரஸ் திரிபினைக் கண்டறிய பயன்படுகிறது.
- தெர்மோ ஃபிசர் எனும் ஒரு அமெரிக்க நிறுவனம் இந்தக் கருவியினை வடிவமைத்து உருவாக்கியது.
- இது டாடா நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது.
- இந்தக் கருவியானது ஓமைக்ரானைக் கண்டறிய S மரபணு இலக்கு நொடிப்பு என்ற முறையை (S Gene Target Failure) பயன்படுத்துகிறது.
- ஓமைக்ரானைக் கண்டறிவதற்கு இந்தியாவில் இந்த முறையைப் பயன்படுத்தும் ஒரே கருவி இதுவாகும்.

Post Views:
684