TNPSC Thervupettagam

இந்தியாவில் சீட்டா (வேங்கை) அறிமுகம் – செயல்திட்டம்

January 8 , 2022 1274 days 661 0
  • மத்திய அரசானது, இந்தியாவில்  சீட்டாக்களை (வேங்கை அல்லது சிவிங்கிப் புலி) அறிமுகம் செய்வதற்கான ஒரு செயல்திட்டத்தினை வெளியிட்டது.
  • இந்தச் செயல்திட்டமானது தேசிய புலிகள் வளங்காப்பு ஆணையத்தின் 19வது சந்திப்பில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டது.
  • இந்தச் செயல்திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 50 சீட்டாக்கள் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்படும்.
  • இதற்காக சுமார் 12 முதல் 14 சீட்டாக்கள் தென் ஆப்பிரிக்கா அல்லது நமீபியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.
  • ஒவ்வொரு சிவிங்கிப்புலி உடலிலும் செயற்கைக்கோள் புவி இடங்காட்டி நுட்பம் சார்ந்த மிக அதிக அதிர்வெண் ரேடியோ அலைகளை வெளியிடும் ஒரு கழுத்துப் பட்டையானது பொருத்தப்படும்.
  • இவை மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ பால்புர் தேசியப் பூங்காவிற்குக் கொண்டு செல்லப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்