இந்தியக் கடற்படையானது 7வது இந்தோ-பசிபிக் பிராந்தியப் பேச்சுவார்த்தையினை (IPRD-2025) புது டெல்லியில் நடத்தியது.
இந்த நிகழ்வின் கருத்துரு, 'Promoting Holistic Maritime Security and Growth: Regional Capacity-Building and Capability-Enhancement' என்பதாகும்.
இந்த நிகழ்வானது, கடற்படையின் அறிவுத் திறன் பங்குதாரரான தேசிய கடல்சார் அறக்கட்டளையுடன் (NMF) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
IPRD 2025 ஆனது, MAHASAGAR (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) என்ற பரந்த கடல்சார் தொலைநோக்கு கொள்கையின் கீழ் நடைபெற்றது.
IPRD 2025, பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பிராந்திய உறுதித்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் மீள்தன்மை மற்றும் வளமான இந்தோ-பசிபிக் என்ற பகிரப்பட்ட நோக்கத்தினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.