ஏழு மாநிலங்களுக்கு ரூ. 5,908 கோடி மதிப்பிலான பேரிடர் நிவாரண நிதியை வழங்க இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதில் கர்நாடகா, உத்தரப் பிரதேசம், அசாம், மத்தியப் பிரதேசம், திரிபுரா, மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை அடங்கும்.
தென்மேற்குப் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச் சரிவுகளால் இந்த மாநிலங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டன.
2020 ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு உயர்மட்டக் குழுவானது தேசியப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து (National Disaster Respond Fund - NDRF) பேரிடர் நிவாரண நிதி அளிக்கப் படுவதற்கு ஒப்புதல் அளித்தது.
NDRF பற்றி
பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ் தேசியப் பேரிடர் நிவாரண நிதி நிறுவப் பட்டது.
NDRF நிதியுடன் சேர்த்து மாநிலப் பேரிடர் நிவாரண நிதி (SDRF) என்ற நிதியும் கூடுதலாக நிறுவப் பட்டுள்ளது.
இந்த நிதியின் நோக்கம் இயற்கைப் பேரிடர்களிலிருந்து உடனடி நிவாரணம் வழங்குவது மட்டுமேயாகும். பயிர் இழப்பு அல்லது சொத்துகளுக்கு சேதம் ஆகியவற்றுக்கான இழப்பீடாக இந்த நிதி வழங்கப் படுவதில்லை.
இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India - CAG) NDRF நிதி குறித்த கணக்குகளைத் தணிக்கை செய்கிறார்.