TNPSC Thervupettagam

75வது சுதந்திரத் தின விழா

August 17 , 2022 1075 days 568 0
  • இந்தியா, விடுதலை பெற்றதன் 75வது ஆண்டு நிறைவு அல்லது தனது 76வது சுதந்திர தினத்தினைக் கொண்டாடுகிறது.
  • “சுவதேசி ஷே சுவராஜ், சுவராஜ் ஷே சூரஜ்” என்ற ஸ்ரீ அரவிந்தரின் ஒரு மந்திரத்தைப் பின்பற்றுமாறு பிரதமர் அவர்கள் மக்களுக்கு வலியுறுத்தினார்.
  • திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் பங்கேற்கும் முதல் சுதந்திரத் தின விழாவில், இராஷ்டிரபதி பவனில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
  • “ஹர் கர் திரங்கா” என்ற பிரச்சாரத்திற்கான இணைய தளத்தில் இந்தியத் தேசியக் கொடியுடன் எடுத்துக் கொண்ட 5 கோடிக்கும் அதிகமான சுயப் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • ந்தத் தினத்தினைக் கொண்டாடுவதற்காக, ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா’ என்ற முன்னெடுப்பினை இந்திய அரசுத் தொடங்கியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு மார்ச் 12  ஆம் தேதியன்று, பிரதமர் அவர்கள் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா முன்னெடுப்பினைத் தொடங்கி வைத்தார்.
  • நாம் சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுவதையும் அதனை நினைவு கூறும் வகையிலும் 75 வார நாள் கணிப்பு தொடங்கப்பட்டது.
  • சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்சில வெளிவராத நாயகர்களின் பெயர்களைக் கொண்ட 16 பூங்காக்களை டெல்லியில் துணைநிலை ஆளுநர் V.K. சக்சேனா அவர்கள் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்