TNPSC Thervupettagam

8வது உலக வர்த்தக அமைப்பின் வர்த்தகக் கொள்கை ஆய்வு

July 30 , 2026 3 days 59 0
  • சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் 8வது உலக வர்த்தக அமைப்பின் வர்த்தகக் கொள்கை ஆய்வில் இந்தியா பங்கேற்றதுடன், இதில் சாதனை அளவிலான ஏற்றுமதிகள் முக்கியக் கவனமாக உள்ளன.
  • இந்த ஆய்வானது, நாட்டின் வர்த்தகக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் மதிப்பிடுகிறது.
  • இது இந்தியாவிற்காக, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படுகிறது.
  • சமீபத்திய ஆய்வானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரையிலான காலப் பகுதியை உள்ளடக்கியது.
  • இது உறுப்பு நாடுகள் சமர்ப்பித்த கொள்கை அறிக்கை மற்றும் உலக வர்த்தக அமைப்பின் செயலகத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு சுயாதீன அறிக்கை ஆகிய இரண்டு முக்கிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டது.
  • வர்த்தகக் கொள்கை ஆய்வு என்பது உலக வர்த்தக அமைப்பின் முக்கிய வெளிப்படைத் தன்மை வழிமுறைகளில் ஒன்றாகும் என்பதோடு இது, ஒரு விரிவான சக மதிப்பாய்வு செயல்முறையின் மூலம், உறுப்பு நாடுகள் ஒன்றின் வர்த்தகக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் மற்றொன்று மதிப்பீடு செய்ய ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்