TNPSC Thervupettagam

8 புதிய மின்மினிப் பூச்சி இனங்கள்

August 28 , 2025 9 days 52 0
  • தமிழ்நாட்டின் மின்மினிப் பூச்சிகள் பற்றிய முதல் மரபணு ஆய்வின் மூலம் ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தில் எட்டு மின்மினிப் பூச்சி இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • இந்த ஆய்வை வண்டலூரில் உள்ள மேம்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம் (AIWC) நடத்தியது.
  • இந்த ஆய்வு மணம்பொல்லி, பொள்ளாச்சி மற்றும் உலந்தி வனப்பகுதிகளில் உள்ள 10 தளங்களில் மேற்கொள்ளப்பட்டது.
  • அடையாளம் காணப்பட்ட இனங்கள் அப்ஸ்கொண்டிடா பெர்ப்ளெக்ஸா, அப்ஸ்கொண்டிடா டெர்மினலிஸ், அசிமெமெட்ரிக்டா ஹுமராலிஸ், மூன்று கர்டோஸ் இனங்கள், லாம்ப்ரிகேரா sp. மற்றும் பைரோகோலியா sp ஆகியனவாகும்.
  • ஃபோட்டோடாக்டிக் நடத்தை என்ற ஒளியின் தூண்டுதலுக்கு ஏற்ற வகையிலான இயக்கம் குறித்தப் பகுப்பாய்வு, அப்ஸ்கொண்டிடா பெர்ப்ளெக்ஸா இருளை விரும்புவதாகவும், பெரும்பாலான வண்ண விளக்குகளைத் தவிர்ப்பதாகவும் காட்டியது.
  • அப்ஸ்கொண்டிடா பெர்ப்ளெக்ஸா இனத்தில் வெள்ளை ஒளி சார்ந்த இயக்கத்தின் பொருட்டு நடுநிலையாக இருப்பது கண்டறியப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்