TNPSC Thervupettagam

8வது பிரிக்ஸ் (BRICS) கடல் மற்றும் துருவப் பகுதி அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கூட்டம்

August 18 , 2026 13 hrs 0 min 5 0
  • 2026-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக, கடல் மற்றும் துருவப் பகுதி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (OPST) குறித்த பிரிக்ஸ் பணிக்குழுவின் 8-வது கூட்டம் கோவாவில் நடைபெற்றது.
  • இக்கூட்டத்தைப் புவி அறிவியல் அமைச்சகத்தின் (MoES) கீழ் இயங்கும் தேசிய துருவ மற்றும் கடல் ஆராய்ச்சி மையம் (NCPOR) நடத்தியது.
  • கடல்சார் அறிவியல் மற்றும் துருவப் பகுதி ஆய்வுகளில் ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான நடுத்தர கால (5 ஆண்டுகள்) செயல் திட்டம் குறித்து 11 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் விவாதித்தனர்.
  • உறுப்பு நாடுகளுக்கு இடையே அறிவியல் ஒத்துழைப்பு, அறிவுப் பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் கூட்டு ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக 2018-ஆம் ஆண்டில் இந்த பிரிக்ஸ் OPST பணிக்குழு நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்