தேசியப் பல்லுயிர் ஆணையம் (NBA), மெஸ்ஸர்ஸ் பயோனியர் ஓவர்சீஸ் பெரு நிறுவனத்திடமிருந்து அணுகல் மற்றும் பயன் பகிர்வு (ABS) மூலம் நிதியை விடுவித்து உள்ளது.
பயோனியர் ஓவர்சீஸ் பெருநிறுவனமானது, இந்தியாவின் உயிரியல் வளங்களைப் பயன்படுத்தி பத்து வணிகரீதியான கடுகு (பிராசிகா ஜுன்சியா) கலப்பின வகைகளை உருவாக்கியுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் கடுகு சாகுபடி செய்யப்படும் பரப்பளவின் அடிப்படையில் ABS பங்கு கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த செயல்முறையானது, நகோயா நெறிமுறை மற்றும் குன்மிங்-மான்ட்ரியல் உலகளாவியப் பல்லுயிர் தன்மை கட்டமைப்பின் இலக்கு 13 ஆகியவற்றின் கீழ் உள்ள நியாயமான மற்றும் சமமான பயன் பகிர்வுக் கொள்கையுடன் ஒத்துப்போகிறது.
இந்தியாவின் கடுகு சாகுபடியில் ஏறக்குறைய 42 சதவீதம் ராஜஸ்தானில் உள்ளது.
இதுவே அதிகபட்ச பயனைப் பெறுகிறது.
இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளன.