ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டமானது (ABDM), 2026 ஆம் ஆண்டு மே 30 அன்று 90 கோடி ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்குகள் (ABHA) என்ற மைல்கல்லைத் தாண்டியது.
ABHA என்பது நோயாளியின் ஒப்புதலுடன் சுகாதாரப் பதிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிப்பதற்கும் பகிர்வதற்கும் உதவும் ஒரு தனித்துவமான டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டை (ID) ஆகும்.
2021-ஆம் ஆண்டில் 14 கோடிக்கும் சற்று அதிகமாக இருந்த ABHA கணக்குகளின் எண்ணிக்கை 2026-ஆம் ஆண்டில் 90 கோடியாக அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேசமானது 15 கோடிக்கும் அதிகமான ABHA கணக்குகளுடன் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் தலா 7 கோடிக்கும் அதிகமான கணக்குகளைக் கொண்டுள்ளன.
மொத்த ABHA கணக்கு வைத்திருப்பவர்களில் 49.75% பெண்கள் உள்ளனர்.