TNPSC Thervupettagam

A23a பனிப்பாறைச் சிதைவு

July 24 , 2026 4 days 39 0
  • உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான A23a, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நகர்ந்து வந்த நிலையில், தென் அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய துண்டுகளாக உடைந்து உள்ளது.
  • A23a பனிப்பாறை 1986-ஆம் ஆண்டில் அண்டார்டிகாவின் ஃபில்ச்னர்-ரோன் பனி அடுக்கிலிருந்து (Filchner-Ronne Ice Shelf) உடைந்த நிலையில், தனது நீண்ட நகர்வைத் தொடங்குவதற்கு முன்பு பல தசாப்தங்களாக கடல் தளத்தில் தரைதட்டி நின்றது.
  • இது அதன் உச்ச நிலையில் சுமார் 3,900 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டிருந்தது என்ற நிலையில் இதுவே இதுவரையில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றாகவும் பல நகரங்களை விடப் பெரியதாகவும் இருந்தது.
  • இந்த பனிப்பாறை வெடல் கடல் வழியாக நகர்ந்து பின்னர் தென் அட்லாண்டிக் பெருங் கடலுக்குள் நுழைந்தது என்பதுடன் அங்குள்ள வெப்பமான நீர் அதன் உருகுதல் மற்றும் துண்டாதலை துரிதப்படுத்தியது.
  • இது உடைவதற்கு வெப்பமான கடல் நீரோட்டங்கள், அலைகளின் தாக்கம் மற்றும் உருகிய நீர் ஆகியவற்றுக்கு நீண்ட காலம் வெளிப்பட்டதே காரணமாக இருப்பதுடன் இது அண்டார்டிக் சூழலில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்