இந்தியா AdFalciVax என்ற பல்நிலை மலேரியா தடுப்பூசியை உருவாக்கி வருகிறது.
இந்தத் தடுப்பூசியானது மனிதத் தொற்றுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதோடு, ஒட்டுண்ணியின் ஏந்திகள்/வெக்டர் மூலம் பரவும் சமூகப் பரவலையும் குறைக்கிறது.
AdFalciVax என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் மீளிணைவு மரபணுவைக் கொண்ட மலேரியா தடுப்பூசி ஆகும்.
இது குறிப்பாக மலேரியாவின் மிகவும் ஆபத்தான வடிவத்திற்கு காரணமான ஒட்டு உண்ணியான பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரத்தின் இரண்டு முக்கியமான நிலைகளை குறி வைத்து வடிவமைக்கப் பட்டுள்ளது.