TNPSC Thervupettagam
July 26 , 2025 12 hrs 0 min 12 0
  • பேரியான்களில் மின்னூட்டம்-சமநிலை (CP) சமச்சீர்மை உடைவதற்கான முதல் சோதனை வழி ஆதாரமானது CERN மையத்தின் LHCb ஒத்துழைப்பால் பெறப் பட்டு உள்ளது.
  • இதன் முடிவு ஆனது துகள் சார் இயற்பியலின் நிலையான மாதிரியுடன் ஒத்துப் போகிறது.
  • தற்போதைய அண்டவியல் மாதிரிகள், பெருவெடிப்பு ஆனது பருப்பொருள் மற்றும் எதிர் பொருளின் ஒரு பெரிய வெடிப்பை உருவாக்கியது என்று கூறுகின்றன என்பதோடு அவற்றில் பெரும்பாலானவை சிறிது நேரத்திலேயே மீண்டும் இணைக்கப் பட்டு அழிக்கப்பட்டன.
  • ஆனால் பேரண்டம் ஆனது சான்றுகளில் மிகக் குறைந்த எதிர்பொருளுடன், சுமார் முற்றிலும் பருப்பொருளால் ஆனது போல் தோன்றுகிறது.
  • இந்த அதிகப்படியான பருப்பொருள் ஆனது ஒரு நிலையான மாதிரியால் விளக்கப் படவில்லை, மேலும் அதன் இருப்பு ஆனது இயற்பியலில் ஒரு முக்கியமான மர்மமாகும்.
  • 1964 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஜேம்ஸ் குரோனின், வாலண்டைன் ஃபிட்ச் மற்றும் சகாக்கள் நடுநிலை K மீசான்களின் சிதைவு குறித்து ஒரு பரிசோதனையை நடத்தினர்.
  • பலவீனமான தொடர்பு ஆனது CP சமச்சீரை மீறுவதாக இது காட்டுகிறது, இது பருப்பொருள் மற்றும் எதிர்பொருள் ஆகியவற்றை வித்தியாசமாக செயல்படுத்தக் கூடும் என்பதைக் குறிக்கிறது.
  • ஃபிட்ச் மற்றும் குரோனின் 1980 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றனர்.
  • CP சீர்மை மீறல் குறித்த ஏராளமான அவதானிப்புகள் பின்னர் பிற மீசோனிக் அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • தற்போது நிலையான மாதிரியின் ஏற்றுக் கொள்ளப்பட்ட பகுதியான இந்த நிகழ்வு ஆனது கபிப்போ–கோபயாஷி–மஸ்காவா (CKM) அணிப் பெருக்க முறையினால் அளவுருவாக்கப் படுகிறது.
  • இது வெவ்வேறு தலைமுறைகளின் குவார்க்குகள் கலப்பு எனப்படும் ஒரு செயல்முறை வழியான பலவீனமான தொடர்பு மூலம் ஒன்றுக்கொன்று மாறுவதற்கான பல்வேறு நிகழ்தகவுகளை விவரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்