குறுகிய தூர உந்து விசை எறிகணைகள் அக்னி-I மற்றும் பிருத்வி-II சோதனைகள் 2025
July 26 , 2025 12 hrs 0 min 12 0
பிருத்வி-II மற்றும் அக்னி-I ஆகிய குறுகிய தூரத் தாக்குதல் வரம்புடைய உந்துவிசை எறிகணைகள் ஆனது ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டன.
பிருத்வி-II மற்றும் அக்னி-I ஆகியவை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் எறிகணை ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியாகும்.
இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உருவாக்கப் பட்டது.
பிருத்வி-II என்பது சுமார் 250–350 கிலோ மீட்டர் தாக்குதல் வரம்பைக் கொண்ட ஒரு நிலம் விட்டு நிலம் பாயும் குறுகிய தூர தாக்குதல் வரம்புடைய உந்துவிசை எறிகணை ஆகும்.
இது திரவ உந்துவிசை, மேம்பட்ட வரையறுக்கப்பட்ட வழிசெலுத்தல் மற்றும் 500 கிலோ கிராம் எடையிலான ஆயுதம் ஏந்துதல் திறன் கொண்டது.
அக்னி-I என்பது 700–900 கிலோ மீட்டர் தூரத் தாக்குதல் வரம்புடையது மற்றும் 1,000 கிலோ எடையுள்ள ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட ஒரு சாலை வழி மற்றும் இரயில் வழி ஏவக்கூடிய எறிகணை ஆகும்.
இது ஒரு முக்கிய நடுத்தர தூர தாக்குதல் தடுப்பு வரம்புடைய எறிகணையாகும்.
இவை இரண்டும் அணு மற்றும் வழக்கமான போர்முனைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை மற்றும் இந்தியாவின் அணுசக்தி முக்கூட்டு அமைப்பில் ஒருங்கிணைந்தவையாகும்.