ஆசியக் கால்பந்து கூட்டமைப்பின் (AFC - Asian Football Confederation) மகளிர் கால்பந்து ஆசியக் கோப்பை இந்தியா 2022 என்ற ஒரு போட்டியினை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 20 முதல் மும்பை, நவி மும்பை மற்றும் புனேவில் நடத்த இந்தியா தயாராக உள்ளது.
இந்தப் போட்டியில் 12 அணிகள் இந்தக் கோப்பைக்காக போட்டியிடும்.
2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் நடத்த இருக்கும் FIFA மகளிர் உலகக் கோப்பைக்கான ஆசிய தகுதியின் இறுதிக் கட்டமாகவும் இந்தப் போட்டி இருக்கும்.
2018 ஆம் ஆண்டின் மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற ஜப்பான் தற்போது நடப்புச் சாம்பியனாகவும் உள்ளது.