TNPSC Thervupettagam

AFSPA சட்டத்தின் நீட்டிப்பு 2025

October 1 , 2025 20 days 58 0
  • உள்துறை அமைச்சகமானது மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தினை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்தது.
  • மணிப்பூரில், ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களைத் தவிர மாநிலம் முழுவதும் இந்தச் சட்டம் பொருந்தும்.
  • நாகாலாந்தில், ஒன்பது மாவட்டங்களில் AFSPA நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசத்தில், அசாம் எல்லைக்கு அருகிலுள்ள திராப், சாங்லாங், லாங்டிங் மற்றும் நம்சாய் மாவட்டத்தின் சில பகுதிகளில் AFSPA சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது.
  • இந்தச் சட்டமானது ஆயுதப்படைகளுக்கு அதன் பலத்தைப் பயன்படுத்துவதற்கும், பிடியாணை இல்லாமல் கைது செய்வதற்கும், அறிவிக்கப்பட்ட பிரச்சினை மிகுந்த பகுதிகளில் சட்டப்பூர்வப் பாதுகாப்புத் திறனை வழங்குவதற்குமான அதிகாரங்களை வழங்குகிறது.
  • மணிப்பூரில் 1981 ஆம் ஆண்டு முதல் AFSPA அமலில் உள்ளது என்பதோடு மேலும் அதன் விதிகள் ஆனது முன்னதாக 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பல பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்