TNPSC Thervupettagam

கடல்சார் துறைக்கான நான்கு பிரிவு சார்ந்த உத்தி

October 1 , 2025 20 days 51 0
  • இந்தியாவின் கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் துறையை புத்துயிர் பெறச் செய்வதற்கான விரிவான நான்கு பிரிவு சார்ந்த உத்திக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • கப்பல் கட்டும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக 24,736 கோடி ரூபாய் மூல தனத்துடன் கப்பல் கட்டும் நிதி உதவித் திட்டத்தினை (SBFAS) 2036 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதில் முதல் பிரிவு கவனம் செலுத்துகிறது.
  • இரண்டாவது பிரிவானது நீண்ட கால நிதியுதவி வழங்கவும் கடன் வாங்கும் செலவுகளைக் குறைக்கவும் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கடல்சார் மேம்பாட்டு நிதியை (MDF) அறிமுகப்படுத்துகிறது.
  • மூன்றாவது பிரிவானது 19,989 கோடி ரூபாய் செலவிலான கப்பல் கட்டும் மேம்பாட்டுத் திட்டம் ஆகும்.
  • இது இந்தியாவின் கப்பல் கட்டும் திறனை ஆண்டுதோறும் மொத்தம் 4.5 மில்லியன் டன்னாக விரிவுபடுத்துவதையும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நான்காவது பிரிவானது கொள்கைச் சீர்திருத்தங்கள், திறன் மேம்பாடு மற்றும் இந்த முன்னெடுப்புகளை மேற்பார்வையிடவும் ஒருங்கிணைக்கவும் ஒரு தேசிய கப்பல் கட்டும் திட்டத்தினை நிறுவுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்