உள்துறை அமைச்சகமானது மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தினை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்தது.
மணிப்பூரில், ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களைத் தவிர மாநிலம் முழுவதும் இந்தச் சட்டம் பொருந்தும்.
நாகாலாந்தில், ஒன்பது மாவட்டங்களில் AFSPA நீட்டிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில், அசாம் எல்லைக்கு அருகிலுள்ள திராப், சாங்லாங், லாங்டிங் மற்றும் நம்சாய் மாவட்டத்தின் சில பகுதிகளில் AFSPA சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது.
இந்தச் சட்டமானது ஆயுதப்படைகளுக்கு அதன் பலத்தைப் பயன்படுத்துவதற்கும், பிடியாணை இல்லாமல் கைது செய்வதற்கும், அறிவிக்கப்பட்ட பிரச்சினை மிகுந்த பகுதிகளில் சட்டப்பூர்வப் பாதுகாப்புத் திறனை வழங்குவதற்குமான அதிகாரங்களை வழங்குகிறது.
மணிப்பூரில் 1981 ஆம் ஆண்டு முதல் AFSPA அமலில் உள்ளது என்பதோடு மேலும் அதன் விதிகள் ஆனது முன்னதாக 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பல பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டன.