இந்தத் தீர்ப்பானது நீதிபதி அருண் மிஸ்ரா அவர்களின் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வினால் வழங்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவர்களது AGR (adjusted gross revenue) கட்டணங்களை 10 ஆண்டு காலகட்டத்திற்குள் மத்திய அரசிற்குச் செலுத்த வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
AGR கட்டணங்கள்
AGR என்பது சரிபார்க்கப் பட்ட மொத்த வருவாய் என்பதைக் குறிக்கிறது.
இது பயன்பாடு மற்றும் உரிமம் குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறையினால் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் ஒரு கட்டணமாகும்.
இது உரிமக் கட்டணங்கள், அலைக் கற்றை பயன்பாட்டுக் கட்டணங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
இது முறையே 3% - 5% மற்றும் 8% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.