இந்தியத் தரநிர்ணய அமைப்பானது (BIS - Bureau of Indian Standards) குழாய்க் குடிநீர் விநியோகத்திற்கான வரைவுத் தரநிலையைத் தயாரித்துள்ளது.
இது “குடிநீர் விநியோகத் தரநிர்ணய மேலாண்மை அமைப்பு – குழாய்க் குடிநீர் விநியோகச் சேவைகளுக்கான தேவைகள்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வரைவானது BIS பொதுக் குடிநீர் விநியோகச் சேவைகள் பிரிவுக் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவானது 2024 ஆம் ஆண்டு வாக்கில் ஊரகக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான மற்றும் போதுமான அளவிலான குடிநீரை அளிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப் பட்டுள்ளது.
இது குடிநீரில் துகள் பொருட்களின் வரம்பிற்கான தரநிர்ணய நிலையை வழங்குகின்றது.
இது ஆர்செனிக், நீரின் பிஎச் அல்லது கார அளவு, அதில் கரைந்துள்ள உப்புகள், நிறம், வாசனை, கலங்கல் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.