தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (NREGS) பெண்களின் பங்கேற்பு
September 4 , 2020 1807 days 705 0
NREGS (National Rural Employment Guarantee Scheme) தளத்தின் படி, 2013-14 ஆம் ஆண்டிலிருந்து NREGS-ல் பெண்களின் பங்கேற்பு குறைவாக உள்ளது.
இது 52.46% ஆகக் குறைந்துள்ளது.
இத்தரவின்படி, NREGS திட்டத்தின் கீழ் 13.34 கோடி பயனாளிகள் உள்ளனர்.
இதில் 6.58 கோடி பெண்கள் உள்ளனர்.
இதில் பெண்கள் பங்கேற்பின் தேசிய சராசரியானது 2.24% ஆகக் குறைந்துள்ளது.
மாநிலங்களிடையே ஆந்திரப் பிரதேச மாநிலமானது இதில் அதிகபட்சமாக 3.58% சரிவைக் கண்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் இத்திட்டத்தில் பெண்களின் பங்கேற்பானது 2019 ஆம் ஆண்டில் 60.5% ஆக இருந்தது.
இது தற்பொழுது 56.47% ஆகக் குறைந்துள்ளது.
இதற்கு அடுத்து மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மிகுந்த சரிவைக் கண்டுள்ளன.
கேரள மாநிலமானது 91.38% என்ற அளவுடன் அதிகபட்ச பெண்கள் பங்கேற்பைக் கொண்டுள்ளது.
இதற்கு அடுத்து, புதுச்சேரி, தமிழ்நாடு, கோவா, இராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை அதிகபட்ச பெண்கள் பங்கேற்பைக் கொண்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரானது குறைந்தபட்ச பெண்கள் பங்கேற்பைக் கொண்டுள்ளது.
அங்கு இது 30.72% ஆக உள்ளது.
இதற்கு அடுத்து உத்தரப் பிரதேசம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் குறைந்தபட்ச அளவிலான பெண்கள் பங்கேற்பைக் கொண்டுள்ளன.