முதலாவது ரோ-ரோ சேவை (Roll On Roll Off – இழுவைச் சேவை)
September 3 , 2020
1809 days
726
- பெங்களூருவில் நெலமங்கலாவிலிருந்து பலே (சோலாப்பூருக்கு அருகில்) வரையில் தென்மேற்கு இரயில்வேயின் முதலாவது ரோ-ரோ சேவையானது தொடங்கப் பட்டுள்ளது.
- இந்திய இரயில்வேயில் தனியாரால் நிர்வகிக்கப்படும் ரோ-ரோ இரயில் சேவை இது மட்டுமே ஆகும்.
- “ரோல் ஆன் ரோல் ஆப்” என்பது திறந்தவெளி இரயில் பெட்டிகளில் பல்வேறு பொருட்களுடன் சாலை வாகனங்களை எடுத்துச் செல்லுதல் என்பதைக் குறிக்கின்றது.
- ரோரோ சேவையானது சாலை மற்றும் இரயில் போக்குவரத்தின் சிறந்த அம்சங்களின் ஒரு கூட்டாகும்.
- ரோ-ரோ இரயில் சேவைகளானது முதன்முறையாக 1999 ஆம் ஆண்டில் கொங்கன் இரயில்வேயில் தொடங்கப் பட்டுள்ளது.

Post Views:
726