TNPSC Thervupettagam

AI தளங்கள் கௌடில்யா மற்றும் Q-FORCE

May 29 , 2026 14 hrs 0 min 73 0
  • இந்திய ராணுவமானது கட்டளைப் புலனாய்வு மற்றும் தளவாட மேலாண்மைக்காக கௌடில்யா மற்றும் Q-FORCE ஆகிய இரண்டு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தளங்களை உருவாக்கியுள்ளது.
  • கௌடில்யா என்பது தரவுப் பகுப்பாய்வு, முடிவெடுப்பதற்கான ஆதரவு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலை ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் AI-ஆதரவு பெற்ற கட்டளைப் புலனாய்வுத் தளமாகும்.
  • Q-FORCE என்பது சரக்கு கையாளுதல், விநியோக சங்கிலி மேலாண்மை மற்றும் பராமரிப்பு செயல்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் தளவாட பயன்பாடாகும்.
  • கௌடில்யா கட்டமைக்கப்பட்ட தரவு உருவாக்கம் மற்றும் பகுப்பாய்வுகளுக்கு இயற்கை மொழி செயலாக்க (NLP) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
  • 2027-ஆம் ஆண்டிற்குள் AI ஒருங்கிணைப்பு மற்றும் தரவு மையப்படுத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான இந்திய இராணுவத்தின் திட்டத்திற்கு இந்தத் தளங்கள் துணைபுரிகின்றன.
  • இதற்கு முன்னர் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட AI பயன்பாடுகளில், சிந்தூர் நடவடிக்கையின் போது சஞ்சய் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட்ட ECAS மற்றும் TRINETRA ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்