AI-மூலம் இயங்கும் மேம்பட்ட வானிலை முன்னறிவிப்பு அமைப்புகள்
May 16 , 2026 15 days 91 0
இந்திய வானிலை ஆய்வு மையம் சிறந்த பருவமழை கணிப்புக்காக இரண்டு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான வானிலை முன்னறிவிப்பு அமைப்புகளைத் தொடங்கியுள்ளது.
முதல் அமைப்பானது, உள்ளூர் மட்டத்தில் மழைப்பொழிவு மற்றும் பருவமழை தொடக்கத்தைக் கணிப்பதற்கான இந்தியாவின் முதல் AI-மூலம் இயங்கும் வட்டார அளவிலான பருவமழை முன்னறிவிப்பு மாதிரியாகும்.
இரண்டாவது அமைப்பானது, எண் சார்ந்த வானிலை முன்னறிவிப்பு மாதிரிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம் AI-மூலம் இயங்கும் பாதிப்பு அடிப்படையிலான வானிலை சேவைகளை வழங்குகிறது.
இந்த அமைப்புகள் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் மற்றும் நடுத்தர அளவிலான வானிலை முன்னறிவிப்பிற்கான தேசிய மையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டன.
இந்த மாதிரியானது ஒவ்வொரு புதன்கிழமையும் நான்கு வாரங்களுக்கு முன்னதாகவே முன்னறிவிப்புகளை வழங்குகிறது என்பதோடு இதில் கால வரம்புப் பிழை கிட்டத் தட்ட நான்கு நாட்களாக உள்ளது.
தற்போது, இந்த அமைப்பு 15 மாநிலங்கள் மற்றும் ஓர் ஒன்றியப் பிரதேசம் முழுவதும் முக்கியமாக மழை சார்ந்த பகுதிகளில் உள்ள 3,196 வட்டாரங்களை உள்ளடக்கியுள்ளது.