ஹைதராபாத்திலுள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது நானோ இழை அடிப்படையிலான AmB எனப்படுகின்ற வாய் வழியே உட்கொள்ளக் கூடிய ஆம்போடெரிசின் பி வகை மாத்திரைகளை உருவாக்கியுள்ளது.
ஹைதராபாத்தின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த தொழில்நுட்பத்தை அறிவுசார் சொத்துரிமை இல்லாத ஒரு தொழில் நுட்பமாகவே வைத்திருக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த மருந்தானது விலை மலிவானதாக இருப்பதோடு, அதிகளவு AmB மூலக் கூற்றை உட்கிரக்கக் கூடிய வகையிலும் சிறுநீரகத்திற்கு அதிக பாதிப்பை உண்டாக்காத வகையிலும் உள்ள ஒரு மருந்தாகும்.
இதற்கு முன்பு AmB மருந்தானது ஊசிகள் மூலமாக மட்டுமே செலுத்தப்பட்டு வந்தது.
இது கோவிட் தொற்றுக்குப் பிந்தைய பூஞ்சை நோய்த் தொற்று பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப் படுகின்றது.