ARISE திட்டம் ஆனது, பிரேசிலின் பெலெமில் நடைபெற்ற COP30 பருவநிலை உச்சி மாநாட்டில் தொடங்கப்பட்டது.
ARISE என்பது நிலையான பொருளாதாரங்களுக்கான தகவமைப்பு முதலீடுகள் மற்றும் புதுமைகளை துரிதப்படுத்துதல் என்பதைக் குறிக்கிறது.
இந்தத் திட்டத்திற்கு ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றிலிருந்து 100 மில்லியன் டாலர் ஆரம்ப நிதி கிடைத்தது.
ARISE என்பது உலக வங்கியால் நடத்தப்படும் பலதரப்புப் பருவநிலை நிதி நெறிமுறை ஆன பருவநிலை முதலீட்டு நிதிகளின் (CIF) கீழ் உள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார மற்றும் நிறுவனத் தகவமைப்பினை வலுப்படுத்துவதையும், தேசியத் திட்டமிடலில் பருவநிலைத் தகவமைப்பினை ஒருங்கிணைப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.