12வது ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு பிளஸ் (ADMM-Plus) நிகழ்வானது, மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் "Reflection on 15 Years of ADMM-Plus and Charting the Way Forward" என்ற தலைப்பில் மன்றத்தில் உரையாற்றினார்.
மலேசியாவின் தலைமையின் கீழ் ஆசியான்-இந்தியா பாதுகாப்பு அமைச்சர்களின் முறைசாரா சந்திப்பும் நடைபெற்றது.
ASEAN (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) மற்றும் இந்தியா இடையே பாதுகாப்பு மற்றும் காவல் சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்த சந்திப்பு கவனம் செலுத்தியது.
ADMM-Plus நிகழ்வில், ASEAN அமைப்பின் 10 உறுப்பினர்களும், இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய எட்டுப் பேச்சுவார்த்தை பங்குதாரர்களும் பங்கேற்றனர்.
2024–2027 ஆம் ஆண்டின் சுழற்சிக்கான தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான நிபுணர்கள் பணிக்குழுவிற்கு மலேசியாவுடன் இணைந்து இந்தியா தலைமை தாங்கியது.