TNPSC Thervupettagam

உலகின் முதல் தலைமுறை அளவிலான புகையிலை தடை - மாலத்தீவுகள்

November 7 , 2025 14 days 66 0
  • 2007 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதிக்குப் பிறகு பிறந்த எவரும் புகையிலைப் பயன்படுத்துவதைத் தடை செய்த முதல் நாடாக மாலத்தீவுகள் மாறியுள்ளது.
  • பாதிக்கப்பட்ட தலைமுறைக்கு சிகரெட் உட்பட அனைத்து விதமானப் புகையிலைப் பொருட்களையும் விற்பனை செய்வதையும் பயன்படுத்துவதையும் இச்சட்டம் தடை செய்கிறது.
  • நாட்டில் உள்ள அனைத்து வயதினரும் மின் சிகரெட்டுகள்/வேப்பிங் மற்றும் மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • வரம்பிற்குட்பட்ட வயதினருக்குப் புகையிலையை விற்கும் சில்லறை விற்பனையாளர்கள் மீது 50,000 மாலத்தீவிய ருஃபியா (சுமார் 2.9 லட்சம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.
  • மின் சிகரெட்டுகள் சாதனங்களைப் பயன்படுத்தும் நபர்களுக்கு 5,000 ரூஃபியா (சுமார் ரூ. 29,000) அபராதம் விதிக்கப்படலாம்.
  • உலகளாவியப் புகையிலைப் பயன்பாட்டு ஒழிப்பு/எண்ட்கேம் இயக்கத்தின் கீழ் புகையிலை இல்லாத தலைமுறை அணுகுமுறையின் ஒரு பகுதியாக இந்தக் கொள்கை உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்