இந்தியக் கடற்படை மற்றும் ஆஸ்திரேலியக் கடற்படை ஆகிய நாடுகளுக்கிடையேயான இருநாட்டுக் கடற்படைப் பயிற்சியான “AUSINDEX” (Australia India Exercise) என்பதின் மூன்றாவது பதிப்பானது விசாகப் பட்டினத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்தக் கூட்டுப் பயிற்சியானது இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையான சாகர் திட்டம் (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) மற்றும் கடல்சார் துறையில் நல்ல ஒழுங்கை உறுதிப்படுத்துவதற்காக இரு நாடுகளின் பகிர்மான நோக்கங்கள் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்துகின்றது.