எரிசக்தி விநியோகத் தடங்கல்கள் மற்றும் விநியோகச் சங்கிலி பின்னடைவுத் திறன் குறித்து விவாதிக்க ஜப்பானால் கூட்டப்பட்டு, இணைய வழியில் நடைபெற்ற AZEC Plus கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது.
இக்கூட்டம் எரிசக்திப் பாதுகாப்பு, கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் விநியோகச் சங்கிலி பின்னடைவுத் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
பாதுகாப்பான மற்றும் தடையற்ற கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளின் அவசியத்தை இந்தியா வலியுறுத்தியது.
இந்தத் தளமானது 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆசிய பூஜ்ஜிய உமிழ்வு சமூகத்தின் (AZEC)ஒரு பகுதியாகும்.
ஆசியாவில் நிலையான மற்றும் நீடித்த எரிசக்தி விநியோகத்திற்கான பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.