April 22 , 2026
5 days
69
- 2026-31 ஆம் ஆண்டிற்கான நதிப் படுகை மேலாண்மைத் (RBM) திட்டத்தை ₹2,183 கோடி மதிப்பீட்டில் தொடர்ந்து செயல்படுத்த இந்திய அரசு முன்மொழிந்துள்ளது.
- இது 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு மத்திய துறை திட்டமாகும்.
- ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நீர்வளத் துறையால் இது செயல்படுத்தப் படுகிறது.
- இது பிரம்மபுத்திரா மற்றும் சிந்துப் பகுதிகள் போன்ற நதிப் படுகைகளில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
- வெள்ளக் கட்டுப்பாடு, மண் அரிப்பு மேலாண்மை மற்றும் நீர்வளத் திட்டமிடல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மத்திய நீர் ஆணையம் (CWC) மற்றும் தேசிய நீர் மேம்பாட்டு முகமை (NWDA) போன்ற நிறுவனங்கள் இதில் அடங்கும்.
- இது படுகை திட்டமிடல், வடிகால் மேம்பாடு மற்றும் சமூகம் சார்ந்த நீர் மேலாண்மை ஆகியவற்றை ஆதரிக்கிறது.
Post Views:
69