TNPSC Thervupettagam

விஸ்வ சூத்ரா முன்னெடுப்பு

April 22 , 2026 5 days 101 0
  • இந்தியக் கைத்தறிகளை உலகளவில் மேம்படுத்துவதற்காக ஜவுளி அமைச்சகம் "விஸ்வ சூத்ரா - உலகிற்கான இந்தியாவின் நெசவுகள்" என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
  • இது தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (NIFT) இணைந்து வளர்ச்சி ஆணையர் (கைத்தறி) அலுவலகத்தால் உருவாக்கப்பட்டது.
  • இது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 30 கைத்தறி நெசவுகளைக் காட்சிப்படுத்துகிறது.
  • ஒவ்வொரு நெசவும் 30 வெவ்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரங்களின் வடிவமைப்புகளால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தியக் கைவினைஞர்களுக்கான சர்வதேச அங்கீகாரத்தையும் சந்தை வாய்ப்புகளையும் அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இந்திய அரசாங்கத்தின் "உள்ளூருக்கான குரல்" (Vocal for Local) பிரச்சாரத்தை ஊக்குவிக்கிறது.
  • இது ஜவுளித் துறையில் 5F (பண்ணை, நார், தொழிற்சாலை, ஃபேஷன், வெளிநாடு) மதிப்புச் சங்கிலியை ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்