தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT), பாரத் உத்யோகிக் விகாஸ் யோஜனா (BHAVYA) திட்டத்திற்கான செயல்பாட்டு வழி காட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
BHAVYA என்பது இந்தியா முழுவதும் முதலீட்டிற்குத் தயாரான மற்றும் உலகத்தரம் வாய்ந்த தொழிற்பேட்டைகளை உருவாக்குவதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு மத்திய துறைத் திட்டமாகும்.
இத்திட்டம் 2026-27 மற்றும் 2031-32 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சுமார் ₹33,660 கோடி மொத்த செலவில் 100 தொழிற்பேட்டைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் இந்தியாவில் தயாரிப்போம் முன்னெடுப்பு, பிரதான் மந்திரி கதி சக்தி திட்டம், உற்பத்தித் துறை வளர்ச்சி, தளவாட மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கிறது.
திட்ட நிறுவனங்கள் சட்டம், 2013-இன் கீழ் சிறப்பு நோக்க வாகனங்கள் (SPVs) மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும், மேலும் தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுக் கழகம் (NICDC) திட்ட மேலாண்மை முகமையாகச் செயல்படும்.