TNPSC Thervupettagam
December 3 , 2025 9 days 51 0
  • BICAN என்பது மேம்பட்ட புதுமையான நரம்பியல் தொழில்நுட்பங்கள் முன்னெடுப்பு உயிரணு/செல் விவரக் குறிப்பு வலையமைப்பு மூலமான மூளை ஆராய்ச்சி என்பதைக் குறிக்கிறது.
  • இது அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்கள் (NIH) அமைப்பின் BRAIN/மூளை முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
  • மேம்பட்டு வரும் மனித மூளையின் விவரக் குறிப்புகளின் முதல் வரைவை ஆராய்ச்சியாளர்கள் நிறைவு செய்தனர்.
  • வளர் நிலை கரு மற்றும் முதிர் கரு நிலைகளில் இருந்து முதிர்வயது வரை பல்வேறு வகையான மூளை செல்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் முதிர்ச்சியடைகின்றன என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது.
  • ஆட்டிசம் மற்றும் ஸ்கிசோஃப்ரினியா போன்ற மூளை தொடர்பான பாதிப்புகளைப் புரிந்துகொள்ள உதவுவதை இந்தக் கண்டுபிடிப்புகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • BICAN என்பது நரம்பியல் அறிவியலாளர்கள், கணிப்பு உயிரியலாளர்கள் மற்றும் திறந்த அணுகல் மூளை விவரக் குறிப்பினை உருவாக்குகின்ற மென்பொருள் பொறியாளர்களின் கூட்டு முன்னெடுப்பாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்