ஒளிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் வலையமைப்பு மேம்பாடு (BIND) திட்டத்திற்குப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.
இது பிரச்சார் பாரதியின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றோடு எண்ணிம உள்ளடக்கம் மற்றும் விநியோக வலையமைப்பினை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரசார் பாரதி வெளிப்புற ஒளிபரப்பு வாகனங்களை வாங்குவதோடு, தூர்தர்சன் மற்றும் அகில இந்திய வானொலி மையங்களை உயர்தர நிலைக்குத் தயார் செய்வதற்காக அவற்றினை எண்ணிம முறையில் மேம்படுத்த உள்ளது.
தற்போது, தூர்தர்சன் 28 பிராந்திய அலைவரிசைகள் உட்பட 36 தொலைக்காட்சி அலைவரிசைகளை இயக்கி வருகிற அதே சமயம் அகில இந்திய வானொலி மையம் 500 ஒளிபரப்பு மையங்களை இயக்கி வருகிறது.
BIND திட்டம் ஆனது தற்போது இந்தியாவில் 59% மற்றும் 68% ஆக உள்ள அகில இந்திய வானொலி மையத்தின் FM அலைபரப்பிகளின் பரவலை முறையே புவியியல் பரப்பு என்ற அளவில் 66% ஆகவும், மக்கள் தொகை அடிப்படையில் 80% ஆகவும் அதிகரிக்க உள்ளது.