- இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI) நறுமணப் பொருட்கள் மற்றும் சமையல் சார்ந்த மூலிகைப் பொருட்கள் மீதான கோடெக்ஸ் குழுவின் (CCSCH - Codex Committee on Spices and Culinary Herbs) 5வது அமர்வினை தொடங்கி வைத்தது.
- CCSCH குழுவானது கோடெக்ஸ் உணவூட்டப் பொருட்களுக்கான ஆணையத்தின் கீழ் (Codex Alimentarius Commission – CAC) நிறுவப்பட்டது.
- நறுமணப் பொருட்கள் மற்றும் சமையல் சார்ந்த மூலிகைப் பொருட்களை உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்காக CCSCH நிறுவப்பட்டது.
- இக்குழு இந்தியாவினைத் தலைமையாகவும் இந்திய நறுமணப் பொருட்கள் (Spices Board India) வாரியத்தைச் செயலகமாகவும் கொண்டு 2013 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
கோடெக்ஸ் உணவூட்டப் பொருட்களுக்கான ஆணையம்
- இது 1963 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
- இது ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்ட அரசுகளுக்கிடையேயான ஒரு அமைப்பு ஆகும்.